பிரவாகம்

கவிதைத் துளிகள். – ஐயப்பன் கிருஷ்ணன்.
1 -

தன் வீட்டுப்

பாத்திரங்களுடன் கலந்த

அண்டை அயலார்

பாத்திரங்களை

கண்டறியும்

குழந்தையைப்  போல

உள்ளில் தோன்றும்

பிற உணர்வுகளை

இனங்கண்டு குத்துகிறது

மனசாட்சி.

2 -

அது ஒரு முன்  காலை நேரம்

காதல் விழித்தெழுந்தது

எங்கேயோ கைப் பட்டு

எதற்கிந்த புள்ளிகள்

இத்தனை வளைவுகள்  என்றான்.

கண்மூடி

முயங்கும் வேளையில்

ப்ரெய்லியின் எழுத்துகள் போலிவை

உதவுமென்றாள்.

சற்று நேரம் கண்ணிழந்தான்

புதுப் பாடங்கள் படிக்க

3 -

மீன் தொட்டி

சுற்றி அழகிய மீன்களின் கூட்டம்

செடிகொடிகள்

வழு வழு கூழாங்கற்கள்

அத்தனையும் கண்ணைக் கவர்கின்றன

தொட்டியின் நீரும் கூட

அழகை அள்ளுகிறது

அத்தனையும் ரசித்த படி

தொட்டி நீரில் விழுந்த

ஓர் துளி எண்ணையாய்

நான்

அது ஒரு மழைக்காலம்!!! *****”குடை வேண்டாம்” – விஜி.சுதன்
அன்றொரு மழை நேரம்; வெளியிலே செல்ல முடியாது என்பதால் யன்னல் வழியே மழைத்துளிகளை ரசித்துக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் படித்த நீர் வட்டம் நினைவின் வழியே வந்து போனது. இயற்கைச்சமநிலை குழம்பாதபடி இறைவன் வகுத்த நியதி என்று என்னுள் வியந்து கொண்டிருந்தேன். ‘மழைக்காலம்’ எல்லோராலும் ரசிக்கப்பட்டாலும்,வீடற்றோருக்கு அது ஓர் நரகவேதனை தான். வீட்டுக்குள் மழை பெய்தால் ரசிக்க மனம் வருமா என்ன?! என்றொரு கேள்வியும் வந்து போனது இருப்பினும் விழுகின்ற மழைத்துளிகள் அதையெல்லாம் மறக்கடித்து தன்பால் என்னை ஈர்த்துக்கொண்டிருந்தது. “மழையின் சாரல்கள் வண்ண விழுதுகள் அந்த விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ?”. என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளை என் மெட்டோடு சேர்ந்து மழையும் வாசித்துக்கொண்டிருந்தது.

ஊரில் என்றால் மழைக்காலம் என்றொரு ‘காலம்’ உண்டு. அன்றைய மாதங்களில் எப்படியும் மழையை எதிர்பார்க்கலாம். ஆனால் இங்கு எப்போது மழை பெய்யும் எப்போது அது பனியாய் பொழியும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணியபடியே ஊரில் இருந்த மழைக்காலங்களோடு பயணித்துக்கொண்டிருந்தேன்.

“சளி பிடிக்கும்;வெளியிலே போகாதே” இது அம்மம்மாவின் அதட்டல். ‘அம்மா, அத்தனை தூரம் அலட்டிக்கொள்வதில்லை; அதட்டுவதும் இல்லை. இதனால் அம்மம்மாவின் சொல்லை மீறியபடியே நனைவது உண்டு. மழையில் நனைவதிலும் அது நனைத்துச்சென்ற இலைகளின் நுனியில் தொக்கி நிற்கும் சொட்டுச்சொட்டாய் சொட்டும் துளியில் த‌லையைத் த‌ட்டிக்கொண்டு அந்த மழைத்துளை நெற்றிச்சுட்டியாய் நெற்றி வழி வந்து நனைத்துச்செல்வ‌தும் பேரான‌ந்த‌ம். வீட்டு முற்ற‌த்தில் ‘ஓடுக‌ளின் நுனிவ‌ழியே மண் துளைத்து ம‌ழைபோடும் குழியில் சின்ன‌ச்சின்ன‌ சிப்பிக‌ளும்,சோகிக‌ளும் காண‌க்கிடைக்கும்.க‌ரும‌ண்ணை மீறிய‌ ‘வெண் ம‌ண‌லும் அத‌ன் வ‌ழியே வ‌ந்து நிற்கும். ‘ஆஹா’ அதை நினைத்தாலே உள்ள‌ம் ந‌னைகிற‌தே!.

சுடச்சுட வடையும், கருப்புத்தேனீரும் மழை காலத்தில் இதமூட்டுபவை. ம்ஹீம். இந்த ஐஸ்கீரீம் சாப்பிடும் ஆசையெல்லாம் எனக்குக்கிடையாது. அதனால் எங்கள் வீட்டில் மழைக்காலம் என்றால் ‘கொறிப்பதற்கு ‘பகோடா, அல்லது வடை, முறுக்கு இத்தோடு கருப்புத்தேனீரும் கட்டாயம் உண்டு. ‘மழைக்காலம் மனதோடு பயணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமோ?! கொறித்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? யன்னல் கதவைத்திறந்து கம்பி வழியே கை நீட்டி கையை நனைத்து, மழைத்துளியைக் கையில் பிடித்து தங்கைமீது, அக்காமீது தெளிப்பது.  காகிதக்கப்பல் செய்து போட்டா போட்டியாய் அதை ஓடிச்செல்லும் மழை நீரில் விட்டு மூழ்கிவிடும் கப்பல் என்னுடையதல்லாதவிடத்து கேலி பண்ணிச்சிரித்து,மழையே மழையே மெத்தப்பெய்! மண்ணில் வெள்ளம் நிறையப்பெய்” என்ற பாலர் பாடலைக்கத்திக் கத்திப்படித்து; .அடடா!!! எத்தனை இன்பமான உணர்வுகள் அவை. ம்ம்ம்ம்..’மழை” மனதுக்குள் பொழியும் மகிழ்ச்சி!.

‘மழை விட்டுச்செல்லும் போதும் மண்ணை, மரத்தை, எண்ணத்தை, மனத்தை குளிரூட்டியே செல்கின்றது. ‘கடலையோடு ஓடிச்சென்று கால் நனைப்பது எத்தனை சுகமானதோ!…..அத்தனை சுகமானது மழை ஈரமூட்டிய மண்ணில் கால் பதிப்பது. வாருங்களேன்!!! ‘சேர்ந்து நனையலாம்’.

புற்றுநோயைப் பற்றிய 10 தவறான கருத்துகள் – டாக்டர்.சங்கர்குமார்
புற்று நோய் என்றாலே ஒரு பயம் அனைவருக்கும் இருக்கிறது. இதற்கான

முக்கியக் காரணம், மற்ற நோய்களைப் போலல்லாமல், இதை முழுமையாகவும்

குணப்படுத்துவதற்கான வழிகளை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பதே. இந்தக்

காரணத்தினால், வழக்கம்போலவே,இந்த நோயைப் பற்றிய பல தவறான கருத்துகள்

மக்களிடையே நிலவி வருகின்றன. அவற்றைப் பற்றி சொல்லுவதே இந்தக்

கட்டுரையின் முக்கிய நோக்கம். அநேக கருத்துகள் இருப்பினும், அதிகமாக

மக்களிடையே நிலவும் பத்து கருத்துகளை இங்கே காண்போம்.

1.” மார்பகப் புற்றுநோய் பெண்களை மட்டுமே தாக்குகிறது!”

பெரும்பாலான ஆண்களின் கருத்து இதுவே என ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால்,

ஆண், பெண் என இருபாலரையும் இந்த நோய் தாக்கும் என்பதே வருத்தமான உண்மை.

மார்பகப் புற்றுநோய் தமக்கு வராது என்னும் தவறான நம்பிக்கையின் காரணமாக,

இதன் அறிகுறிகளை அலட்சியம் செய்து, கிட்டத்தட்ட நோய் முற்றிப் போன

பின்னரே மருத்துவரை அணுகுவது என்பதே இதில் வருத்தமளிக்கும் செய்தி.

2. “புற்றுநோய் வருவது ஒரு மரண சாஸனம் போல!”

மற்ற நோய்கள் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய தைரியம் உடைய மக்கள்,

புற்றுநோய் என்னும் பெயரைக் கேட்டதுமே, தங்களது சாவுக்கான மரண ஓலை இது என

நினைத்து மனம் தளர்ந்து போய்விடுவதையே பெரும்பாலும் காண்கிறோம்.

மெய்யாகச் சொல்லப்போனால், ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு சில

புற்று நோய்களைக் கட்டுப்படுத்தி, அதிகம் பரவ விடாமல் பார்த்துக்கொண்டு,

வாழ்நாளை நீட்டிக்க இயலும் என்பதே உண்மை. 80 முதல் 90 விழுக்காடு வரை 5

ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடிய வகையில் இவற்றைக் கட்டுப்படுத்த

முடியும்.

3. “புற்றுநோய் ஒரு தொற்றுநோய்!”

முற்றிலும் தவறான இந்தக் கருத்தை பெரும்பாலானோர் ஒரு நம்பிக்கையாகக்

கொள்வதையே இங்கு காண்கிறோம். இது தவறு மட்டுமல்ல; இதனால நாம் அன்புடன்

நேசிப்போருக்குத் தேவையான சேவையையும், அன்பையும் காட்டக்கூடிய

வாய்ப்பினையும் நழுவ விட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கிறோம் என்பதைப்

புரிந்துகொண்டு, புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல என்பதை அனைவருக்கும்

எடுத்துச் சொல்லுங்கள்.

4. “இது ஒரு பரம்பரை நோய்!”

அதாவது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் வந்தால்,

மற்றவர்களுக்கும் இது பரம்பரையாகத் தொடரும் எனும் ஒரு தவறான கருத்து

மக்களிடையே இருக்கிறது. புற்றுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. ஒரே

குடும்பத்தில் இருப்பவர்கள் வாழுகின்ற சுற்றுப்புறச் சூழல், மற்றும் வேறு

பல காரணிகள் ஒரே வகையான புற்றுநோய் அந்தக் குடும்பத்தில் இருப்பவர்க்கு

வரக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தலாமே தவிர, மற்றபடி இந்தக் கருத்து

பெரும்பாலும் தவறான ஒன்றே. இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், சற்று

அதிகமான பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்ள நேரிடுமேயன்றி, வேறெந்த ஆபத்தும்

இல்லை.

5. “அலைபேசி உபயோகிப்பதால் புற்றுநோய் வரும்!”

மருத்துவ, விஞ்ஞான ரீதியில் இதற்கு ஆதாரமே கிடையாது. இருந்தாலும்,

எப்படியோ இந்த வதந்தி பரவி, பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கிறது.

6. “மற்ற நோய்களைக் காட்டிலும், புற்றுநோயினால் வலி அதிகம் உண்டாகும்!”

புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளில் சில கடுமையான வலியை ஒரு பக்க

விளைவாகக் கொடுக்கலாமே தவிர, பெரும்பாலான புற்றுநோய்களில் வலி என்பது ஒரு

முக்கியமான விளைவே அல்ல. வலி என்பதே துளிக்கூட இல்லாமல் பலகாலம்

அமைதியாகவே இருந்து, இறுதியில், முக்கியமான சில இடங்களுக்குப் பரவி அதன்

மூலமாக வலி உண்டாகலாமே தவிர, மற்றபடி இந்தக் கூற்றில் சிறிதளவும் உண்மை

கிடையாது.

7. “கடைசிக் காலத்தில்தான் புற்றுநோய் வலியைக் கொடுக்கும்!”

இதற்கு முந்தியதற்கு நேர்மாறான நம்பிக்கை இது! ஒவ்வொரு வகையான

புற்றுநோயும் ஒவ்வொரு விதத்தில் செயல்படும். ஒரே புற்றுநோய் கூட

ஆளுக்காள் வித்தியாசப்படலாம். மேலும், இதன் கடுமையினாலும் இது மாறுபடும்.

அதாவது, ஆரம்ப நிலையில் [Initial Stage] இருப்பவர்க்கும், அதே நோயின்

இறுதிக் கட்டத்தில் [Terminal Stage] இருப்பவர்க்கும் ஏற்படும் வலிகள்

வெவ்வேறானவை.. வலி, வலியில்லாமை இவை இரண்டையும் வைத்து, எந்தப்

புற்றுநோயையும் அளவிடக் கூடாது.

8. “மார்பகப் புற்றுநோய் வந்தால், அந்த மார்பகத்தையோ, அல்லது இரண்டையுமோ

இழக்க வேண்டியதுதான்!”

முற்றிலும் தவறு. கண்டுபிடிக்கப்படும் நிலையைப்[Staging] பொறுத்தே

மார்பகத்தை அகற்றுவது என்பது நிகழும். ஆரம்ப நிலையில்

கண்டுபிடிக்கப்பட்டால், பெரும்பாலும் அந்தக் கட்டியை அகற்றுவதோடு மட்டுமே

அறுவை சிகிச்சை நடந்து, தொடர்ந்து வேறுவிதமான சிகிச்சை மூலம் நோயைக்

கட்டுப்படுத்த முடியும்.

9. “புற்றுநோய் வந்தால் முடி அதிகமாகக் கொட்டும்!”

இது உண்மையல்ல! புற்றுநோய்க்கான மருந்துகள், மற்றும் கதிர்வீச்சு

இவற்றின் காரணமாக இது நிகழலாம். ஆனால், இவ்வகை சிகிச்சை மேற்கொள்ளுவோர்

அனைவருக்குமே இவ்வாறு நிகழ்வதில்லை என்பதே உண்மை. முடிவளர்ச்சிக்கும்,

உதிர்வதற்கும், புற்றுநோயோடு எவ்வித சம்பந்தமும் இல்லை.

10. “புற்றுநோய்க்கான தீர்வைக் கண்டுபிடித்தாகி விட்டது. ஆனால்,

மருந்துக் கம்பெனிகள்தான் இதை ஒரு ரகசியமாக வைத்திருக்கின்றனர்!”

தங்களுக்கு அதிக லாபம் வேண்டுமே என்றுதான் மருந்துக் கம்பெனிகள் இதற்கான

தீர்வை மறைத்து வைத்திருக்கின்றனர் என்பது உண்மையானால், இந்த

நிறுவனங்களைச் சார்ந்த பல அதிபர்களே இந்த நோய்க்குப் பலியாகியிருப்பதைப்

பார்த்தால் இது எவ்வளவு தவறான ஒரு கருத்து என்பது புரியவரும். முற்றிலும்

குணப்படுத்துவதற்கான மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுபோல இன்னும் எத்தனையோ தவறான கருத்துகள் வாய்வழியாகவும், இணைய

வாயிலாகவும் மக்களைச் சென்று குழப்புகின்றன. நம் உடலின் ஏதேனும் ஓர்

இடத்தில், தேவையில்லாத வகையில் ஒரு கட்டியோ, அல்லது வேறேதேனும்

அறிகுறிகளோ தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்

கொள்வதே ஒரே தீர்வு. வதந்திகளை நம்பாமல், முறையான ஆலோசனை பெற்று

வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் வணக்கம்.